சர்வைவர் ஷோவால் இந்திரஜாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை... பேரதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
சர்வைவர் ஷோவால் நடிகை இந்திரஜா காலில் பட்ட காயம் காரணமாக தற்போது பெரிய கட்டு போட்டு இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்கிறார்.
ஜீ தமிழில் சர்வைவர் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் ஒரு வாரம் மட்டுமே ஷோவில் இருந்தார்.
அதன் பின் மூன்றாம் உலகம் என்கிற தீவில் தனிமையில் விடப்பட்டார். அங்கு அவர் காயத்ரி உடன் இருந்தார். அதன் பின் ஒரு வாரம் கழித்து அங்கு நடந்த போட்டியில் தோற்று எலிமினேட் ஆனார்.

அங்கு இருந்த காலகட்டத்தில் அவர் உடலில் பல்வேறு பிரச்சனைகள் வந்தது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது அவர் காலில் பெரிய கட்டு உடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த அனைவரும் அவருக்கு என்ன ஆனது என கேட்டு அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். சர்வைவர் சென்றதால் இவ்வளவு பாதிப்பா என ஷாக் ஆக கேட்டு வருகின்றனர்.
இதேவேளை, சர்வைவர் எளிமையான விஷயம் கிடையாது. எனக்கு பல காயங்கள் ஷோவில் ஏற்பட்டது. அதில் இருந்து மீளுவதும் பெரிய டாஸ்க் தான் இருப்பதாகவும் இந்திரஜா குறிப்பிட்டிருக்கின்றார்.