கடைசியாக மாமனாருக்கு மகனாக மாறிய கார்த்திக்.. இறுதி காரியம் செய்த காட்சி வைரல்
மாப்பிள்ளையாக வந்து மகனாக மாறிய கார்த்திக் ரோபோ சங்கருக்கு செய்த சடங்குகள் இணையவாசிகள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர்.
இவர், சின்னத்திரையில் ஆரம்பித்த மீடியா பயணம் நாளாக நாளாக அவருடைய திறமையை வளர்த்துக் கொண்டு சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்தார். இவரின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாக உள்ளது.
இப்படி இருந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் நேற்றைய தினம் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் கொடுக்காமல் ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
இறுதி சடங்கு செய்த மருமகன்
இந்த நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வீடு தேடி வந்து தங்களின் இரங்கலை தெரிவித்தனர்.
அதன் பின்னர், ரோபோ சங்கருக்கு மகன் இல்லாத காரணத்தினால் அவருடைய மருமகன் கார்த்திக் மகனாக இருந்து இறுதி சடங்குகளை செய்துள்ளார்.
இறுதி ஊர்வலத்தில், தீ பந்தம் ஏற்றி, மொட்டை அடித்து சடங்கை நிறைவு செய்தார். இதன்போது எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் மின் மயானத்தில் நடிகர் ரோபோ சங்கரின் இறுதி சடங்கு நடைபெற்றது என்பதும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |