திருமணத்தில் இந்திரஜா அணிந்திருந்த ஜாக்கெட்டை கவனித்தீர்களா? மறைந்திருக்கும் ரகசியம் இதோ
இந்திரஜா தனது திருமணத்தின் போது அணிந்திருந்த ஜாக்கெட் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
இந்திரஜா சங்கர்
இந்திரஜா சங்கர் தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.
இவரது மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜாக்கெட்டின் சீக்ரெட்
இந்திரஜா தங்க இழையால் ஆன புடவையை கட்டியிருந்த நிலையில், இவர் அணிந்திருந்த ஜாக்கெட்டின் டிசைன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
திருமணத்துக்காக இந்திரஜா சங்கர் அணிந்திருந்த ஜாக்கெட்டில் ’KI’ என கை பகுதியில் கார்த்திக் மற்றும் இந்திரஜாவின் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களை குறிக்கும் விதமான டிசைன் உருவாக்கப்பட்டிருந்தது.
மேலும், அதற்கு கீழ் தாலி போன்ற டிசைனையும் வைத்து அசத்தியுள்ள நிலையில், இவை ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்கின்றது.
இனிமேல் திருமணத்தில் பல பெண்களும் இதே போல பெயர் டிசைன்களை சேலையிலும் ஜாக்கெட்டிலும் அணிந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |