சூப்பர் சிங்கர் சிவாங்கிக்கு திருமணமா? அவரே வெளியிட்ட பதிவு
சூப்பர் சிங்கர் சிவாங்கி வெளியிட்டுள்ள பதிவு தற்போது திருமணம் செய்ய தயாராகிவிட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சிவாங்கி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சிவாங்கி. இந்நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமான இவருக்கு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாகவும் கலக்கினார்.
குறித்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயனுடன், பணியாற்ற ஆசைப்படுவதாக கூறிய சிவாங்கிக்கு, உடனே டான் படத்தின் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார். பின்பு பல படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்துள்ளது.
பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக் ஆகவும் மாறி தனது சமையல் திறமையினை காட்டி அசத்தினார்.
வைரலாகும் சிவாங்கியின் பதிவு
திரைப்படங்களில் நடிப்பது, பாடல் பாடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிசியாக இருந்து வரும் நிலையில், இவரது பதிவு ஒன்று திருமண வதந்தியை கிளப்பியுள்ளது.
அதாவது இவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் சமூக ஊடகங்களை திறந்தாளே திருமணம், நிச்சயதார்த்தம், கர்ப்பமாக இருக்கும் செய்திகள் இருக்கின்றன. நான் தற்போது அந்த கட்டத்தில் தான் இருக்கின்றேனா என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை காரணமாக எடுத்துக் கொண்ட ரசிகர்கள் சிவாங்கி திருமணம் போகின்றாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |