ரோபோ சங்கர் மகளுக்கு நடந்த ஏமாற்றம்.. இனி என்ன செய்யப்போகிறார்கள்?
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் மகளான இந்திரஜாவுக்கு விமான நிலையத்தில் நடந்த ஏமாற்றத்தை கண்டிக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்திரஜா சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள வாரிசு நடிகைகளில் ஒருவர் இந்திரஜா சங்கர்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் உணர்ச்சிகரமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்.
இதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திலும் இந்திரஜாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கு பின்னர் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்த்த வேளையில், அவருடைய மாமா- கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இவர்களுக்கு ஆண் குழந்தையொன்றும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா மகன் மற்றும் கணவருடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் காணொளியை பகிர்வது வழக்கம்.
ஏமாற்றத்தில் போட்ட பதிவு
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ரோபோ சங்கர் எதிர்பாராத விதமாக இந்த உலகை விட்டு பிரிந்து விட்டார். தந்தையை இறந்த சோகம் தாங்க முடியாமல் இந்திரஜா தற்போது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.

இதற்கிடையில், விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்த இந்திரஜாவிற்கு பெரிய ஏமாற்றம் ஒன்று நடந்துள்ளது. விமானம் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்து போன இந்திரஜா, “ இது போன்று செய்ய வேண்டாம். ஏனெனின் அவசரமாக சென்னை போக வேண்டிய பயணிகள் பலர் இங்கு இருக்கிறார்கள். மற்ற விமான சேவைகளின் கட்டணம் கூட அதிகரித்து விட்டன. பயணிகளின் சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்..” என வேண்டுகோள் விடுக்கும்படி குறிப்பிட்டு காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |