திருமணத்திற்கு பின் கணவர் “பெண்” என தெரிந்ததும்... அதிர்ச்சியில் மனைவி
இந்தோனேசியாவை சேர்ந்த 22-வயது பெண் ஒருவர் தான் மணம் முடித்து 10 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த தன் கணவர் உண்மையில் ஒரு பெண் என்று அறிந்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டேட்டிங் ஆப்பில் மலர்ந்த காதல்
கடந்த மே 2021ல், ஒரு டேட்டிங் ஆப் மூலமாக தான் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.
அந்த செயலியில், தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்றும் தனக்கு தொழிலில் நல்ல வரவேற்பும் வருமானமும் உள்ளதாக பதிவிட்டிருந்தார் கணவர்.
கொஞ்ச நாட்களுக்கு டேட் செய்த பிறகு, இருவருக்குள்ளும் காதல் மலரவே, இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். ஆனால், திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான எந்த ஆவணத்தையும் கணவர் ஒப்படைக்கவில்லை.
எனினும், மகளின் சந்தோஷத்திற்காகத் திருமணம் செய்துவைக்கப்பட்டது. திருமணமான புதிதில் அந்த பெண்ணின் வீட்டிலேயே தம்பதியினர் தங்கியிருந்துள்ளனர்.

பணம் கேட்டு சித்திரவதை
ஆனால் திருமணமான முதல் நாளிலிருந்தே கணவரும், அவரது குடும்பத்தினரும் மனைவி வீட்டாரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். சிறிது காலம் கழித்து தனியே South Sumarta-விற்கு குடிபெயர்ந்து விட்டனர் தம்பதியினர்.
இதன் பிறகு தான் கணவரின் சித்திரவதைகள் அதிகரித்துள்ளது. மனைவியை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைப்பது, அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் பேச விடாமல் அலைப்பேசியைப் பறித்து வைப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார்.
ஒரு முறை, அந்த பெண்ணின் கணவர் தனக்கு நீச்சல் தெரியாது என்று தெரிந்துக்கொண்டே, தன்னை நதியில் குதிக்க சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூறினார்.
ஆணாக மாறி நாடகம்
இவ்வாறு தங்கள் மகளிடம் தொடர்புகொள்ளவிடாமல் கொடுமை படுத்தவே, காவல்துறையில் புகாரளித்த பெண் வீட்டார், நடத்திய விசாரணையில் தான் திடுக்கிடும் உண்மை ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது, இத்தனை நாட்களாக, அவரது மகளின் கணவர் என்று சொல்லிவந்தது ஒரு பெண். Con Artist ஆன இவர், ஆண் போல வேடம் தரித்து இவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளார்.
இதனையடுத்து ஜம்பி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.