உக்ரைனில் இருந்து 10 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு - முக்கிய அறிக்கை வெளியிட்ட அமைச்சகம்!
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து நடைப்பெற்று வருவதால், சிக்கிய இந்தியர்களை மீட்டு வருகின்றனர். இருப்பினும், உக்ரைனில் இருந்து தப்பித்து வர முடியாத சூழ்நிலையில் பல இடங்களில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
இதனிடையில், உக்ரைனில் இருந்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன், ரஷியா இடையேயான மோதல் தொடர்வதால் மீட்பு பணியில் சிக்கல் தொடர்கிறது.
உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், உக்ரைனில் இருந்து இதுவரை 10, 400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களை மீட்க 24 மணி நேரத்தில் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு 16 விமானங்கள் இயக்கப்படும். கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்தியர்கள் தற்போது 5 பேருந்துகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கார்கிவ் நகரில் 300 பேரும், சுமி பகுதியில் 700 இந்திய மாணவர்களும் சிக்கியுள்ளனர்.