World’s Longest Hair: 8 அடி 10 அங்குல கூந்தல்… உலக சாதனை படைத்த இந்தியப் பெண்!

Hair Growth Guinness World Records
By Vinoja Aug 11, 2026 07:00 AM GMT
Report

World’s Longest Hair: Indian Woman Sets a New Record -உலகிலேயே மிக நீளமான கூந்தலைக் கொண்ட வாழும் பெண் என்ற பெருமையைப் ரேணு பெற்றுள்ளார்.

நீண்ட கூந்தல் என்றாலே அழகு, பாரம்பரியம், பெண்மையின் அடையாளம் எனப் பல்வேறு எண்ணங்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால், உத்தரகாண்டைச் சேர்ந்த ரேணு தரியலுக்கு அவரது நீண்ட கூந்தல் தற்போது உலக சாதனையையே பெற்றுக்கொடுத்துள்ளது.

அவரது கூந்தலின் நீளம் 271.50 சென்டிமீட்டர் (8 அடி 10 அங்குலம்) என அளவிடப்பட்டுள்ளது. கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள் இந்தச் சாதனையை அதிகாரப்பூர்வமாக எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர்.

World’s Longest Hair: 8 அடி 10 அங்குல கூந்தல்… உலக சாதனை படைத்த இந்தியப் பெண்! | Indian Woman Sets World Record For Longest Hair

‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை

‘நாட்டாமை குடும்பம்’ என பச்சை இருந்தால் நேரடி சந்திப்பு– சரத்குமாரின் புதிய யோசனை

இதன் மூலம், உக்ரைனைச் சேர்ந்த அலியா நசிரோவா கடந்த காலத்தில் படைத்திருந்த 257.33 சென்டிமீட்டர் என்ற சாதனையை ரேணு முறியடித்துள்ளார்  என தெரிவிக்கப்டுகின்றது.

2015-ஆம் ஆண்டு முதல் சிறப்பு பராமரிப்பு

கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்டின் ஹல்த்வானியில் கின்னஸ் உலக சாதனைப் பிரதிநிதிகள் ரேணுவின் கூந்தலை நேரடியாக அளந்து, அதன் நீளத்தை அதிகாரப்பூர்வமாகச் சரிபார்த்தனர்.

இந்தியக் கலாச்சாரத்தில் நீண்ட கூந்தல் என்பது வெறும் அழகின் அடையாளம் மட்டுமல்ல; அது பாரம்பரியத்துடனும் இயற்கையுடனும் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதுவே தனக்கு உத்வேகமாக இருந்ததாக ரேணு தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தனது தலைமுடியை வெட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இன்று அந்த முடிவு அவரை உலக சாதனையாளராக மாற்றியுள்ளது. தரையைத் தொட்டபடி நீளமாகப் பரந்து கிடக்கும் அவரது கூந்தலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பலரும் ரேணுவுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

World’s Longest Hair: 8 அடி 10 அங்குல கூந்தல்… உலக சாதனை படைத்த இந்தியப் பெண்! | Indian Woman Sets World Record For Longest Hair

Iqbal Sheikh: 5 ஆண்டுகளாக குளத்திலேயே வாழ்க்கை! 16 வயது சிறுவனின் கண்ணீர் கதை

Iqbal Sheikh: 5 ஆண்டுகளாக குளத்திலேயே வாழ்க்கை! 16 வயது சிறுவனின் கண்ணீர் கதை

இவ்வளவு நீளமான கூந்தலை வளர்ப்பது எவ்வளவு சிரமமோ, அதைப் பராமரிப்பதும் அதைவிடப் பெரிய சவால்தான். உள்ளடக்க உருவாக்குநரும் யூடியூபருமான ரேணு, தனது கூந்தலைப் பராமரிப்பதில் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து வருகிறார்.

தலைமுடியைக் கழுவுவது, பின்னர் அதிலுள்ள சிக்கல்களை நீக்குவது என ஒவ்வொரு பணிக்கும் பல மணி நேரங்கள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது யூடியூப் சேனல் வாயிலாக, வீட்டிலேயே தயாரிக்கப்படும் இயற்கையான கூந்தல் எண்ணெய்கள், ஷாம்புகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு முறைகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US