viral Video: பிரான்சில் மொட்டை மாடியில் துணி காயவைக்கும் பெண்
இந்தியாவை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் தம்பதி ஒருவரின் வீடியோ வைரலாகி வருவதுடன் கமெண்டுகளை குவித்து வருகிறது.
அந்த வீடியோவில், மனைவியின் செயலை பார்த்த கணவர் ”என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என கேட்கிறார்.
அதற்கு அவரோ ”துணி காயவைத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார், ”யார் சொன்னது இப்படி செய்யலாம் என்று?” என கேட்கிறார், இதெல்லாம் ”இந்தியாவில் கற்றுக்கொண்டது” என்கிறார்.
துணி காயவைத்ததற்காக கணவர் என்னை திட்டி விட்டார் என தலைப்பிட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் மனைவி பகிர, அதற்கு கணவரோ உங்கள் மனைவி வெளிநாட்டுக்கு அழைத்து வரும் முன் பலமுறை யோசித்துக்கொள்ளுங்கள் என நகைச்சுவையாக பதிலளிக்கிறார்.
துணிகளை சுத்தம் செய்ய பிரான்சில் செலவு அதிகம் என்பதால், தானே சுத்தம் செய்து ஈரத்துணிகளை காயவைத்ததாகவும் குறிப்பிடுகிறார் மனைவி.
ஆனால் இதற்கெல்லாம் பிரான்சில் அனுமதி இல்லை என கணவர் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அப்பெண்ணோ காதில் வாங்கியதாக தெரியவில்லை.