ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன நபர்: நம்பமுடியாத ஜாக்பாட்
ஐக்கிய அரபு நாட்டில் லாட்டரி மூலம் இந்தியர் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன சம்பவம் அரங்கேறிள்ளது.
ஐக்கிய அரபு நாட்டில் அரசு அனுமதியுடன் இந்த லாட்டரி விற்பனை அரங்கேறி வருகின்றது. அபுதாபி பிக் டிக்கெட், எமிரேட்ஸ் டிரா, மஹ்சூஸ் டிரா போன்ற வாராந்திர டிராவில் ஏராளமான மக்கள் உலகம் முழுவதும் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில் அபுதாபி பிக் டிக்கெட் குலுக்கலில் கத்தாரில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு 5,00,000 திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 1,02,46,187 ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது.
இந்த பிக் டிக்கெட் நடைமுறை கடந்த 1992ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. இதில் ரொக்கப்பரிசு, கார் என பரிசுமழை இருப்பதால் உலக முழுவதும் உள்ள மக்கள் கலந்துகொள்கின்றனர்.
ஆனால் இதில் பெரும்பாலும் வெளிநாடு வாழ் இந்தியர்களே அதிகமாக இந்த டிக்கெட்டினை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்துவரும் கோலன்தாஸ் அகமது ஷ்வுகத் என்பவருக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், தனது இரண்டு குழந்தைகளும் பிறந்த பிப்ரவரி மாதம் தனது வாழ்வில் அதிர்ஷ்டமானது என்றும் இந்த மாதத்தில் தான் இந்த டிக்கெட் வாங்கினேன். கடந்த ஒரு ஆண்டுகளாக வாங்கி எதிர்பார்த்த பரிசு இந்த பிப்ரவரி மாதத்தில் 114308 என்ற எண் கொண்ட டிக்கெட் வாங்கியதில் தான் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
குறித்த நபருக்கு இந்த பரிசுத் தொகை மட்டுமல்லாது மார்ச் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட குலுக்களுக்கும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளாராம்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24