2025 கிராமி விருதுகள்- இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்
இந்திய வம்சாவளி சேர்ந்த பெண்ணொருவருக்கு இசைக்கலைஞருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் இசைக்கலைஞருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருதின் 67வது விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று இடம் பெற்றது.
“த்ரிவேணி” இசை ஆல்பம்
அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன் டன் (வயது 71) சிறந்த தற்கால ஆல்பம் (BEST NEW AGE ALBUM) எனும் பிரிவில் அவரது “த்ரிவேணி” இசை ஆல்பத்திற்காக கிராமி விருது வென்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க புல்லாங்குழல் இசைக்கலைஞரான வௌட்டர் கெல்லர்மேன் மற்றும் ஜப்பானிய செல்லிஸ்ட் எரு மாட்சுமோட்டோ ஆகியோருடன் இணைந்து அவர் உருவாக்கிய இந்த “த்ரிவேணி” இசை ஆல்பம் பல்வேறு முன்னனி இசைக்கலைஞர்களுடன் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
குறித்த பெண், சென்னையில் வளர்ந்த சந்திரிகா மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின்னர், அமெரிக்காவில் குடியேறி அங்கு தொழிலதிபராக உயர்ந்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் வெளியிட்ட “சோல் கால்” இசை ஆல்பம் 2009 ஆம் ஆண்டு கிராமி விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |