உலகிலேயே வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள் பட்டியல்- எந்த நாடு முதலிடத்தில்?
சர்வதேச அளவில் பல நாடுகளின் நாணயத்தின் பெறுமதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு நாட்டின் நாணயத்திற்கு ஒவ்வொரு இடம் கிடைத்துள்ளது.
ஒரு நாடு சர்வதேச அளவில் வர்த்தகம் செய்வதற்கும், பொருளாதார நிலைமையை எடுத்துக்காட்டவும் உறுதுணையாக இருப்பது அந்நாட்டின் நாணயமாகும்.
தற்போது 180 நாடுகளின் நாணயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளது. அதில் சில நாணயங்கள் உலக அளவில் பிரபலமானவை. அவை பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் உலகின் அதிக சக்திக் கொண்ட நாணயமாக இருக்கும் நாணயத்தின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- 1ம் - குவைத் தினார்
- 2ம் - பஹ்ரைன் தினார்
-
3ம் - ஓமன் ரியால்
- 4ம் - ஜோர்டான் தினார்
- 5ம் - ஜிப்ரால்டர் பவுண்டு
-
6ம் - பிரிட்டன் பவுண்டு
-
7ம் - கேமன் டாலர்
-
8ம் - சுவிட்சர்லாந் ப்ராங்
- 9ம் - ஐரோப்பிய யூனியன் யூரோ
- 10ம் - அமெரிக்க டாலர்
1960-ஆம் ஆண்டு முதல் வலிமையான நாணயத்தின் பட்டியலில் குவைத்தின் தினார் முதலிடத்தில் இருந்தது. குவைத்தின் வலிமையான பொருளாதாரமும், எண்ணெய் வளங்களுமே இதற்கு காரணமாக அறியப்பட்டுள்ளது.
மேலும் இந்திய நாணயமானது 15-வது இடத்தை பெற்றுள்ளது. உலகிலேயே மிகவும் நிலையான நாணயம் ஸ்விட்சர்லாந்தின் பிராங்க் காணப்படுகின்றது.