இரயிலில் பயணம் செய்யும் பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்டங்கள் என்னென்ன?
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் சுதந்திரமாகவே பல இடங்களுக்கு செல்லகின்றனர். இணைய உலகம் வளர்ச்சி அடைந்ததில் இருந்து, அங்காங்கே நடக்கும் அநியாங்களை வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர்.
ஆனால், பயணம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் சில சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமான ஒன்று.
அந்த வகையில், ரயிலில் தனியாகப் பயணிக்கும் பெண்களை பாதுகாக்கும் சட்டம் ஒன்று உள்ளது என்பது குறித்து நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?
பெண்களுக்கான சட்டம்
ஆம் அதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகின்றோம். இந்திய இரயில்வே துறை. 1989 ஆம் ஆண்டில், இந்திய இரயில்வே பெண் பயணிகளை பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்கியது.
இதில், இந்திய இரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 139 இன் படி, ஒரு பெண், ஆண் பயணி இல்லாமல் தனியாகப் பயணம் செய்து, தன் குழந்தையுடன் இருந்தால், அப்போது பயணச்சீட்டு இல்லாமல் இருந்தால், இரவில் ரயிலில் இருந்து இறங்கும்படி உத்தரவிட முடியாது என்கிறது இந்த சட்டம்.

மேலும், அதிகாரிகளுடன் ஒரு பெண் கான்ஸ்டபிள் இருக்கும்போது மட்டுமே ஒரு பெண்ணை வெளியேறச் சொல்ல முடியும். இந்திய ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 311 இன் படி, இராணுவ வீரர்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் நுழைந்தால், அவர்கள் அத்தகைய பெட்டிகளில் நுழைவதை நாகரீகமாக தடுக்க வேண்டும்.
இதனால் அவர்கள் பொதுவான பெட்டிகளில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும். ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 162 இன் படி, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் 12 வயதுக்கு குறைவான ஆண் குழந்தை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.
பெண்களின் பெட்டிகளில் நுழையும் ஆண் பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சட்டம் அறிவுறுத்துகிறது.
அதுமட்டுமின்றி, இரயில்வே துறை பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.