திருமணமான 10 நிமிடத்தில் லேப்டாப்புடன் மணப்பெண்! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
திருமணச் சடங்குகள் முடிந்த அடுத்த 10 நிமிடங்களிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பிழையைத் திருத்த மணக்கோலத்தில் மடிக்கணனியுடன் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளிப் பெண்ணின் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மெகுல் அகர்வால் மற்றும் கௌரி அகர்வால் ஆகிய சகோதரிகள் இணைந்து 'கோயல்' என்ற ஏ.ஐ தளத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மெகுல் தனது சமூக ஊடக பக்கங்களில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அவரது சகோதரியும் நிறுவனத்தின் இணை நிறுவனருமான கௌரி அகர்வால், மணக்கோலத்தில் லேப்டாப்பில் தீவிரமாக வேலை செய்துகொண்டிருப்பதையும் அருகில் அவரது கணவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பதையும் காட்டுகின்றது.
மெகுல் தனது பதிவில், “மக்கள் ஸ்டார்ட்அப் தொடங்குவதை மிக அழகாகக் கற்பனை செய்கிறார்கள், ஆனால் அதற்கு கடுமையாக உழைப்பும் அர்பணிப்பும் தேவைப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

திருமணச் சடங்கு முடிந்த 10 நிமிடங்களில், தனது நிறுவனத்தின் முக்கியமான தொழில்நுட்பப் பிழையை கௌரி சரிசெய்து கொண்டிருக்கிறார்.
இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல, இதைப் பார்த்து எங்கள் பெற்றோர் எங்களை பயங்கரமாகத் திட்டினார்கள். நாங்கள் ஏன் வெற்றி பெறுகிறோம் என்று யாராவது கேட்டால், இதைத்தான் நான் சுட்டிக்காட்டுவேன்” என்று பெருமையாகப் பதிவிட்டிருந்தார்.
குறித்த பதிவு இணையத்தில் வைரலாகிய நிலையில் சிலர் இவர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டுக்களை குவித்து வரும் அதே நேரம் ஒரு தரப்பினர் இது இவர்களின் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகின்றது என்று கடுமையாக சாடி வருகின்றனர்.
People romanticize startups but it is a lot of work.
— Mehul Agarwal (@meh_agarwal) December 16, 2025
This is my sister & co-founder @gauri_al at her own wedding, 10 minutes after ceremony, fixing a critical bug at @KoyalAI.
Not a photo op, parents yelled at both of us.
When people ask why we won, I'll point to this. pic.twitter.com/ee3wTEYwXG
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |