பல லட்சங்களுக்கு விலைப்போகும் இந்தியாவின் 100 ரூபாய் நோட்டு- அதில் அப்படி என்ன இருக்கு?
பழங்கால பொருட்களின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில், சமீபத்தில் லண்டனில் நடந்த ஏலத்தில் அரிய இந்திய ரூ.100 ரூபாய் நோட்டு ரூ.56 லட்சத்திற்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பழங்கால பொருட்களை சேகரிப்பாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களை இந்த செய்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. “ஹஜ் நோட்டு” என்று குறிப்பிடப்படும் இந்தநோட்டு, கடந்த 1950 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது.
அப்போது இந்திய ரிசர்வ் வங்கி வளைகுடா நாடுகளுக்கு புனித யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு இதனை வழங்கியுள்ளனர்.
சிறப்புக்கள்
HA 078400 என்ற தொடர் எண்ணைக் கொண்ட இந்த 100 ரூபாய் நோட்டுக்கள் வரலாற்றின் முக்கிய பொருளாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமான இந்திய ரூபாயை வைத்து சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுக்க இதுபோன்ற நோட்டுகளை வெளியிட்டது.
இந்த “ஹஜ் நோட்டுகள்” வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் மட்டுமே சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்ற தகவலும் பரவலாக உள்ளன. எனவே இந்த நோட்டை சட்டவிரோத பரிமாற்றத்தையும் தடை செய்வதற்காக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 1961 ஆம் ஆண்டு, குவைத் அதன் பணத்தை அச்சிடத் தொடங்கியதால் மற்ற நாடுகள் அதனை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். இதனால் ஹஜ் நோட்டுகளின் புழக்கம் நாளுக்கு நாள் குறைய ஆரம்பித்துள்ளது.
கடந்த 1970 ஆம் ஆண்டு நோட்டுக்கள் அச்சிடுதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, வரலாற்று பொருட்கள் சேகரிப்பாளர்களால் மதிப்புமிக்க பொருளாகக் கருதப்படுகின்றன. ஏனெனின் இந்த நோட்டுக்கள் மிகவும் அரிதான தன்மை கொண்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |