Jio: வெளிநாட்டு எண்களிலிருந்து அதிகமாக மிஸ்டு கல் வருகின்றதா? எச்சரிக்கை பதிவு
ஜியோ சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு வெளிநாட்டு எண்களிலிருந்து மிஸ்டு கால் வரும் நிலையில், இதற்காக எச்சரிக்கையை ஜியோ நிறுவனம் விடுத்துள்ளது.
ஜியோ நிறுவனம்
தொலை தொடர்பு நிறுவனங்களில் முன்னணியாக இருப்பது ஜியோ நிறுவனம் ஆகும். பெரும்பாலான மக்கள் ஜியோ சிம்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜியோ சிம் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி வெளிநாட்டு எண்களிலிருந்து மிஸ்டு கால் வருவதால், இதுகுறித்து ஜியோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடிக்கடி மிஸ் கால் எண்ணுக்குத் திருப்பிக் கூப்பிட்டால், உங்கள் கால் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த செயலை தவிர்ப்பது நல்லது.
அதாவது பிரீமியம் ரேட் சேவை மோசடியில் சர்வதேச எண்களிலிருந்து மிஸ்டு கால்களை கொடுக்கிறார்கள். இந்த எண்ணுக்கு திருப்பிக் கூப்பிட்டால், பிரீமியம் ரேட் சேவையுடன் இணைக்கப்பட்டுவிடுமாம்.
இந்த மோசடியில், பயனர்களிடமிருந்து அதிகப்படியான தொகை வசூலிக்கப்படுகின்றது. இது உங்கள் வங்கியில் உள்ள பணத்தை அனைத்தையும் காலி செய்யக்கூடுமாம்.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நீங்கள் அறியாத குறியீடுகளைப் பயன்படுத்துகின்றனர். அவை உங்களுக்கு உண்மையான நம்பர் போன்று தோன்றுமாம்.
ஆகவே +91 அல்லாத நாட்டுக் குறியடுகளைக் கொண்ட எண்களைத் திருப்பிக் கூப்பிடுவதைத் தவிர்க்கவும்.
சந்தேகத்திற்குரிய சர்வதேச எண்களிலிருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகளைப் பெற்றால் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத உள்ளூர் எண்களுக்கும் திருப்பி கூப்பிடக்கூடாதாம்.
இந்த மோசடி பரவலைத் தடுக்க உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்குத் இந்த மோசடி குறித்து தெரியப்படுத்தவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |