முதன்முறையா களமிறக்கப்பட்ட ரோபோ டீச்சர் எங்கேன்னு தெரியுமா?
இந்தியாவின் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஒன்று ஆசிரியர் சேவைக்காக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கெ.டி.சி.டி உயர் நிலைப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரோபோ
இந்த ரோபோ கேரளாவைச் சேர்ந்த நிறுவனமான மகேர் லாப்ஸ் தயாரித்து இருக்கிறது. மாணவர்களின் கற்றல் அனுபவத்தை ஆர்வப்படுத்தும் வகையில் இந்த ரோபோ டீச்சர் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஐரிஸ் என பெயரிடப்பட்டள்ளது. இது பாடத்தை கற்று தரும் ஆசிரியாகளுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொழில் நிறுவனம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலியின் அம்சங்கள் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரோபோவிடம் கேள்வி எழுப்பினால் அது அந்த கேள்விக்குரிய பதிலை வழக்கும் மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களை மிக இலகுவாக வழங்கக் கூடியது.
இது ஒரு பெண் ஆசிரியை போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது தனது பாதங்களில் உள்ள வீல்கள் மூலம் நகர்ந்து செல்வதுடன் கைகளை அசைத்து பேசவும் முடியும்.