இந்தியாவில் குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல்: 60 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பினால் பல குழந்தைகள் பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஃபிரோசாபாத் நகரில் மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது. இந்த காய்ச்சலின் அறிகுறியும், டெங்கு காய்ச்சலின் அறிகுறியும் ஒன்றாக இருப்பதாக சுகாதாரதுறை தெரிவித்தள்ளது.
குறித்த காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இந்த காய்ச்சலுக்கு, கொரோனாவிற்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்துள்ளது.
பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக 60ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை அதிகம் தாக்குவதால் சுகாதார நிபுணர் குழுவை அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் ஒருபுறம் மக்கள் பீதியில் இருப்பதுடன், குறித்த காய்ச்சல் ஆக்ரா, மெயின்புரி உட்பட பல பகுதிகளில் தீயாய் பரவி வருகின்றது.
அத்துடன் ஃபிரோசாபாத்தில் உள்ள பள்ளிகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.