வலுப்பெற்ற போராட்டம்! கனடா வாழ் இந்தியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுவடைந்ததால், அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கொரோனா வைரஸால் 31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை கிட்டதட்ட 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனால், வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதன்படி சமீபத்தில் லாரி டிரைவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாகும் என அறிவித்த நிலையில், இத்தகவலால், பூகாம்பமாய் வெடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டங்கள் ஓயாத நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒட்டாவாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை ஒட்டாவா மேயர் ஜிம் வாட்சன் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், ஒட்டாவா டவுன்டவுன் போன்ற பகுதிகளுக்கு செல்வதை கனடா வாழ் இந்தியர்கள் தவிர்க்குமாறு அந்நாட்டின் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
ஊரடங்குச் சட்டம் உட்பட உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.