ஆட்டோ டிரைவரை மணந்த வெளிநாட்டு பெண்! காதல் வளர்ந்த கதை என்ன தெரியுமா?
பெல்ஜியத்திலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கொரோனாவில் மலர்ந்த காதல்
கர்நாடக மாநிலம் ஹம்பியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் ராஜ் என்பவர் வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார்.
நான்கு வருடத்திற்கு முன்பு கெமில் என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் பெல்ஜியத்திலிரு்து, இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்களுக்கு ஆனந்த் ராஜ் சுற்றுலா வழிகாட்டியாக சென்று அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் ஆனந்த் ராஜ் மற்றும் கெமிலுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆனந்த்ராஜின் நேர்மையை அவதானித்த கெமில் அவர் மீது காதல் கொண்டுள்ளார்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்த நிலையில், கொரோனா காலகட்டமாக இருந்ததால், திருமணத்தை தள்ளிப்போட்ட இந்த ஜோடிகள், நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
தற்போது இந்த ஜோடிகள் திருமணம் செய்த நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.