Ind vs Aus கடைசி டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்த இரு நாட்டு பிரதமர்கள்...
Ind vs Aus கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் கண்டு ரசித்தனர்.
Ind vs Aus 3 ஒருநாள் போட்டி -
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் சமீபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து இந்தியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.
போட்டியை கண்டு ரசித்த இரு நாட்டு பிரதமர்கள்
இந்நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனியுடன் பிரதமர் மோடி இணைந்து ரசித்தார். பின்னர் முதல் அரை மணி நேர ஆட்டத்தை பார்த்துவிட்டு, இரு பிரதமர்களும் மைதானத்திலிருந்து புறப்பட்டு சென்றனர்.
போட்டிக்கு முன்பு இவர்கள் இருவரும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை சந்தித்து பேசினர். இந்த கிரிக்கெட் போட்டி மூலம் இரு நாட்டுப் பிரதமர்களும் 75 வருட நட்பை மகிழ்ந்து கொண்டாடினர்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
जय हिन्द ????
— Babita Phogat (@BabitaPhogat) March 9, 2023
A game to remember?????
Incredible moment for cricket fans in India, Australia and world over !
PM Shri @narendramodi ji with PM @AlboMP at Narendra Modi stadium. #BorderGavaskarTrophy2023 ! pic.twitter.com/CQpeWiT0Nb
Cricket, a common passion in India and Australia! Glad to be in Ahmedabad with my good friend, PM @AlboMP to witness parts of the India-Australia Test Match. I am sure it will be an exciting game! ?? ?? https://t.co/XvwU0XCbJf pic.twitter.com/JwJecwUkHi
— Narendra Modi (@narendramodi) March 9, 2023