பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியடைந்த இந்திய அணி! புவனேஷ்வர் குமாருக்கு குவியும் வாழ்த்துக்கள்
பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றியடைந்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியை விளையாடி வருகிறது. இதுவரை நடந்த ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டியும் இந்திய அணியே வெற்றியை பதிவு செய்தது.
இந்த நிலையில், இன்றைக்கான இரண்டாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைப்பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார்.
வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 41 பந்துகளில் 52 ரன்களை அடித்தார். இதனைத்தொடர்ந்து, 186 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆரம்பத்தில் நிதானத்தை கடைப்பிடித்தது.
அதன் பின்னர் 2 விக்கெட்டுக்கு பின், பூரான் மற்றும் பவல் ஜோடி வான வேடிக்கை காட்ட ஆரம்பித்தது. இந்திய அணியின் பவுலர்களை நான்கா பக்கமும் சிதற விட்டனர்.
பூரான் 62 ரன்களில் வெளியேற, கடைசி ஜோடிக்கு பவல் மற்றும் பொல்லார்ட் விளையாடி வந்தனர். இறுதி வரை போராடிய அந்த அணிக்கு, கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது, இரண்டு சிக்ஸர்களை பறக்க விட்டார் பவல், கடை இரண்டு பந்துக்கு, 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது வீசிய ஹர்ஷல் பட்டேல் ஓவரில் இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
இதன் மூலம், இந்திய அணி 3 டி20 போட்டிகளில் இரண்டு வெற்றியை பறித்து தொடரை வென்றுள்ளது. சிறப்பாக இந்த ஆட்டத்தில் ரவி பிஷ்னேய், புவனேஷ்வர், சாஹல் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
இப்போட்டியின் வெற்றிக்கு முக்கியமாக காரணமாக புவனேஷ்வர் குமார் 19 ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தது தான்.