இந்திய தென்னாப்பிரிக்க தொடர் ; திடீரென விலகிய கே.எல் ராகுல் - புதிய கேப்டன் அறிவிப்பு!
ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
நாளை ஜூன் 9ம் தேதி தொடங்கும் இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு தொடங்கும். கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார்.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது.

காயம் காரணமாக விலகல்
இந்நிலையில், பயிற்ச்சியை மேற்கொண்ட போது திடீர் பின்னடைவாக கே.எல்.ராகுல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் வழிநடத்துவார்களாம்.

குல்தீப் விலகல்
மேலும், அடுத்ததாக இந்திய அணியில் பார்ம் அவுட் காரணமாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த குல்தீப் யாதவ் அவரும் காயமடைந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.