69 ஆண்டு கால சாதனையை முறியடித்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் - குவியும் வாழ்த்துக்கள்
இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5வது டெஸ்ட் விளையாடி வரும் நிலையில், விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்ததோடு இரண்டாவது இன்னிங்சில் 57 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் விக்கெட் கீப்பராக ஆசியாவுக்கு வெளியே ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் நிகழ்த்தியுள்ளார்.

ரிஷப்பின் சாதனை
இதற்கு முன் 1953-ல் விஜய் மஞ்சுரேக்கர் கிங்ஸ்டனில் 161 ரன்கள் எடுத்தார் இந்த சாதனையானது மிக நீண்ட காலமாக உடைக்கப்படாமல் இருந்தது இப்போது ரிஷப் பண்ட் அந்த இடத்தில் தன் பெயரை பொறித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியாவின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெயருக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்ட ரிஷப் பண்ட் இப்போது ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் ஒப்பிடப்பட்டு கூறி வருகிறார்கள்.

69 ஆண்டு காலம்
மேலும், 69 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த டெஸ்டில் மொத்தமாக 2 இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 203 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை டார்கெட்டாக நிர்ணியித்து விளையாடி வருகிறது.