வாழைப்பழ தோல் சாப்பிட்டால் முக்கியமான ஹார்மோனை தூண்டுமாம்.. அப்போ இனி தூக்கி எறியாதீங்க!
பொதுவாக வாழைப்பழம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.
சாப்பாட்டிற்கு பின்னர் எது இல்லாவிட்டாலும் கண்டிப்பாக ஒரு வாழைப்பழம் இருக்கும். வாழைப்பழம் சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமானது.
இவ்வாறு சாப்பிட்டு பின்னர் அதன் தோலை குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் பழம் எவ்வளவு நன்மையோ அதன் தோலும் அவ்வளவு நன்மைகளை வைத்துள்ளது.
அந்த வகையில் வாழைப்பழ தோலில் என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதனை பார்க்கலாம்.
வாழைப்பழ தோலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
Image - Medical News Today
1. வாழைப்பழ தோலில் மகிழ்ச்சி உணர்வை தூண்டும் செரோடோனின் ஹார்மோன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த ஹார்மோன் நம்முடைய மனநிலையை மேம்படுத்தி மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்குமாம். வாழைப்பழ தோலை 3 நாட்களுக்கு சாப்பிட்டால், செரோடோனின் அளவு 15 சதவீதம் அதிகரிக்கிறது எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2. அத்துடன் ஓய்வுடன் கூடிய நிம்மதியான தூக்கத்தையும் தருகின்றது.
3. வாழைபழத்தை விட வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகின்றது. செரிமான பிரச்சினை இருப்பவர்கள் வாழைப்பழத்துடன் சேர்த்து தோலையும் சாப்பிடுங்கள்.
Image - NDTV Food
4. சருமத்திற்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதில் அளவிற்கு அதிகமாகவே இருக்கின்றது. மேலும் வாழைப்பழத்தோலால் நகங்கள், முகப்பரு, சுருக்கங்கள் நீங்கி முகத்தில் பொலிவு வரும்.
5. வாழைப்பழத்தோல் இரத்த அணுக்களின் சிதைவைத் தடுத்து வலுப்படுத்த உதவியாக இருக்கின்றது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |