எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பரான மூலிகை டீ!
பொதுவாகவே மனித உடலுக்கு சக்தி என்பது மிக மிக முக்கியமாகும்.
எமது உடலில் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும். உடல் வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்துக் கொள்ளும்.
எனவே, உடல் சக்தியானது நமக்கு மிகவும் முக்கியமானது அதனை சரிசெய்ய ஒரு சிறந்த மூலிகை டீ போதுமானது.
இந்த மூலிகை டீயை தயாரிப்பது மிகவும் இலகு, வாருங்கள் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- குருமிளகு
- இலவங்கப்பட்டை
- ஏலக்காய்
- காய்ந்த இஞ்சிபொடி
- ஓமம்
- மஞ்சள்
செய்முறை
முதலில் குருமிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், ஓமம் போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு சிறிய பாத்திரத்தில் நீரை சேர்த்து சூடாக்கிக் கொள்ளவேண்டும்.
சூடான நீரில் காய்ந்த இஞ்சிப்பொடி மற்றும் மஞ்சள் சேர்த்து நன்றான சூடாக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு முன்னதாக அரைத்துவைத்திருந்த குருமிளகு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், ஓமம் கலந்த பொடியையும் சூடான நீரில் சேர்த்து கொதிக்கவைத்துக் கொள்ள வேண்டும்.