கண்பார்வை பிரச்சினையால் அவதிப்படுகிறிர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க
கண்பார்வை ஆரோக்கியம் என்பது அவசியமான ஒன்றாகும். கண் பார்வையினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கண்பார்வை ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம்?
கண் பார்வையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியமாகும். நாம் அன்றாடம் எடுக்கும் ஓய்வை பொறுத்தே நமது ஆரோக்கியம் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
நீண்ட நேரம் மொபைல், கணினி இவ்வாறான டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.
தினமும் இரண்டு நேரம் உள்ளங்கைகளால் கண்களை மூடிக்கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.
மீன், கேரட், பப்பாளி போன்ற கண்பார்வையை மேம்படுத்தும் உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
வெயிலில் வெளியே செல்ல வேண்டும் என்றால் கூலிங் க்ளாஸ் அணிந்து கொள்ளவும். இதனால் கண்பிரச்சினை தவிர்க்கப்படும்.
நள்ளிரவு நேரங்களில் முக்கியமாக விழித்திருப்பதை தவிர்க்கவும்.
தினமும் இரண்டு முதல் இதண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது கட்டாயமாகும். இதனால் உடல்சூடு குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாகவும் இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |