என்னுடைய Close Friend! த்ரிஷாவின் அறிவிப்பு... யாரு அந்த நெருங்கிய நண்பர்?
த்ரிஷா நேற்று முக்கியமான ஒரு அறிப்பை அறிவிக்கப்போவதாக தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பை தற்போது தன்னடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா
நடிகை திரிஷா கோலிவுட்டில் கடந்த பல வருடங்களாக டாப் நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான கருப்பு திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியை அள்ளிக்கொடுத்தது.

நடிகை த்ரிஷா தன்னுடைய கெரியரில் என்னதான் பிஸியாக இருந்தாலும் அவரை பற்றி இணையத்தில் சர்ச்சையும் ஒரு பக்கம் போய்க்கொண்டு தான் இருக்கிறது.
அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செம கூலாக தன்னுடைய வாழ்விலும், கரியரிலும் கவனத்தை செலுத்திவருகிறார்.
இந்த நிலையில் த்ரிஷா முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அது என்னவாக இருக்கும் என்ற ஆவல் பெரும்பாலானோரிடம் இருந்தது.தற்போது அந்த அறிப்பு வெளியாகி உள்ளது.

த்ரிஷாவின் அறிவிப்பு
த்ரிஷாவின் அறிவிப்பில் "ஹலோ சென்னை. என்னுடைய க்ளோஸ் ஃப்ரெண்டோட ஒரு கனவு இன்று ஒரு டீமாக மாறியிருக்கிறது.
அவரது டீம் பெயரை நான் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
'சென்னை தமிழ் டைட்டன்ஸ்'. நம்ம டீம் தமிழ்நாடு பிக்கிள் பால் ப்ரீமியர் லீக் சீசன் 2ல் கலந்துகொள்கிறது. என்னுடைய தோழி வரலட்சுமிக்கும் மொத்த டைட்டன்ஸ் டீமுக்கும் என் மனதார வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |