பாரதிராஜா இறக்கும்போது யாரும் இல்லை.. ஏன்? அவருடைய தம்பியே சொல்லும் காரணம் என்னனு பாருங்க
நடிகர் பாரதிராஜா அவர்கள் இறந்த அன்று தனியாக இருந்ததற்கான காரணம் என்ன என்று இந்த பதவில் விரிவாக காணலாம்.
இயக்குனர் பாரதிராஜா
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதி ராஜா தனது 84 வயதில் நேற்றைய தினம் காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
கிராமத்து கதையை மையமாக கொண்டு பல திரைப்படங்களை இயக்கியதுடன், பல கதாநாயகிகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
1977ம் ஆண்டு 16 வயதினிலே படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த இவர், பெரும்பாலான சினிமா நடிகைகளை கிராமத்து மண்வாசனையுடன் பொதுமக்களின் வீதிக்கு கொண்டு வந்தவர் ஆவார்.

சிறந்த நடிகராகவும் திகழும் இவர், சமீப காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது மகன் கடந்த ஆண்டு உயிரிழந்த பின்பு மனம்வாடிப் போனவர் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்தும் வந்தார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது வீட்டில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும் போது அவர் அருகில் யாரும் இல்லாத காரணத்தை இங்கு கீழே காணலாம்
காரணம் என்ன
பாரதிராஜா அவர்கள் இறந்த நாளில் அவர் அருகில் யாரும் இல்லை என்பதற்கான காரணத்தை தற்போது அவரது தம்பியான ஜெயராஜ் கூறியுள்ளார்.
கங்கை அமரன் அவர்கள் தனது அன்னன் மீது வைத்திருந்த பாசத்தினாலே அவர் அவ்வாறு ஆவேசமாக பேசியதாக அவர் கூறினார். அது மட்டுமின்றி அண்ணி அவரை நன்றாக பார்த்துக் கொண்டார்.

ஆனால் அவர் இறந்த அன்று அண்ணி தேனியில் ஒரு முக்கியமான குடும்ப நிகழ்ச்சிக்கு கட்டாயமாக போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர் தேனியில் இறங்கிய நேரத்தில் இந்த செய்தியை கேட்டு உடனே அவர் சென்னை கிளம்பி வந்துள்ளார்.
இந்த சூழ்நிலை தெரியாமல் அன்னன் அவ்வாறு கோவமாக பேசிவிட்டார் என்றும் நாங்கள் அவரிடம் அதன் பிறது நடந்ததை கூறியதாகவும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |