மினிமலிஸ்ட் ஸ்டைலில் ஆனந்த் அம்பானி- ராதிகா.. மெஸ்ஸியுடன் வைரலாகும் புகைப்படங்கள்
தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியா வந்த பொழுது ஆனந்த் அம்பானி- ராதிகா தம்பதிகள் வந்தாராவை சுற்றிக்காட்டிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அம்பானி குடும்பத்தினர்
உலகின் உள்ள பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் அம்பானியின் நிகர மதிப்பு ரூ. 8.45 லட்சம் கோடி (அல்லது 101 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகைக்கு முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி ஆகியோர் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள்.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, குடும்பத்திற்கு அதிகமான வருமானத்தை கொண்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

மெஸ்ஸி இந்தியா வருகை
இந்த நிலையில், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக இருக்கும் லியோனல் மெஸ்ஸி, GOAT டூர் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய இடங்களுக்கு பயணம் செய்த மெஸ்ஸி குஜராத்தின் ஜாம்நகருக்கு சென்றிருக்கிறார். அப்போது ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் இருவரும் வந்தாரா வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்கு இந்திய கலாச்சார முறைப்படி வரவேற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, வந்தாராவிலுள்ள அம்பே மாதா எனப்படும் துர்கை அம்மனுக்கான பூஜைகள், கணேஷ் பூஜை, ஹனுமன் பூஜை, சிவ அபிஷேகம் போன்ற பூஜைகளும் நடந்துள்ளன.
ஆடையில் என்ன ஸ்பெஷல்?
இந்த நிகழ்வில், ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, இருவரும் கருப்பு நிற ஆடையில் வந்திருந்தனர்.
இந்த க்ளாசிக்கான ஆடையை அணிந்த ராதிகா, நேர்த்தியான ஒரு டாப் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அதே போன்று மினிமலிஸ்ட்டான இந்த லுக்கை சிறிய தோடு, மோதிரம், இயற்கையான மற்றும் லேசான மேக்-அப் போட்டுள்ளார்.

ராதிகாவை போன்று ஆனந்த் அம்பானியும் சிம்பிளாக ஒரு கருப்பு நிற ஷர்வானி அணிந்துள்ளார். ஷர்வானியின் மீதான ஜாக்கெட் பந்த்கலா காலர் வடிவமைப்புடனும், தோள்பட்டை பகுதியில் Pad வேலைப்பாடும், ஆர்னேட் பட்டன்களும் பொறுத்தப்பட்டு, ஒரு பட்டு பாக்கெட்டும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |