206 எலும்புகளுக்கு உயிர் கொடுக்கும் பழங்கள்- உணவியல் நிபுணரின் பரிந்துரை
உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துக்களில் கால்சியம் சத்து முக்கிய இடம் பிடிக்கிறது.
பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியம் மற்றும் அதன் வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
எலும்புகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள கால்சியம் சத்து தேவை. புரதம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களுடன் கால்சியம் சேர்ந்து வலுவான எலும்புகளை உருவாக்கிறது. அத்துடன் மூளைக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்பை பேணுகிறது.
50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தினமும் 1,000 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது. அதே போன்று ஆண்களுக்கு 1,200 மில்லிகிராம் கால்சியம் தேவைப்படுகிறது. எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் அவசியம் என உணவியல் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
எலும்புகள் முதல் பற்கள் வரையிலான அனைத்து முக்கிய உறுப்புக்களுக்கும் கால்சியம் சத்து அவசியமாகிறது.
பால், சீஸ், தயிர், கீரை, கடுகு இலைகள், கொட்டைகள், எள், சோயா பால், செறிவூட்டப்பட்ட சாறுகள் போன்ற பச்சை காய்கறிகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளன. தினமும் சாப்பிட்டு வந்தால் மற்றவர்களை விட நீங்கள் ஆரோக்கியமானவர்களாக பார்க்கப்படுவீர்கள்.
அந்த வகையில், உடலுக்கு ஏன் கால்சியம் சத்து அவசியம் என்றும், கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் தொடர்பிலும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்
1. கிவி பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் ஆகிய இரண்டு சத்துக்களும் அதிகமாக உள்ளது. இந்த பழத்தை சாப்பிடும் பொழுது சுமாராக 60 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அதன் சாற்றையும் டயட்டுடன் சேர்த்து கொள்ளலாம்.
2. வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. அத்துடன் இந்த பழத்தில் வைட்டமின் டி சத்தும் உள்ளது. கால்சியம் சத்து உறிஞ்சலை அதிகப்படுத்தும் இந்த பழத்தை பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.
3. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அத்துடன் அன்னாசிப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அதிகமாக உள்ளது. கால்சியம் சத்து வலுவாக இருக்கும் அன்னாசிப்பழத்தை மாதவிடாய் காலங்களில் பெண்கள் முற்றாக தவிர்க்க வேண்டும். பற்களின் ஆரோக்கியத்திலும் இந்த பழம் தாக்கம் செலுத்துகிறது.
4. பெர்ரி பழங்கள், ப்ளாக்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரி ஆகிய பழங்களிலும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இந்த பழங்கள் சாலட் போன்று வடிவங்களில் எடுத்து கொள்ளலாம். இவை அனைத்திலும் 20 மில்லிகிராமுக்கு மேல் கால்சியம் உள்ளது.
5. பெரும்பாலானவர்கள் வெண்டைக்காய் சாப்பிட மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் காய் வகைகளை பார்க்க வெண்டைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. எட்டு தேக்கரண்டி வெண்டைக்காயில் சுமாராக 65 மில்லிகிராம் கால்சியம் உள்ளதாக கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |