Keerai Adai: காலை உணவிற்கு வரகு அரிசி கீரை அடை
கால்சியம் மற்றும் நார்ச்சத்து அடங்கிய வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை உணவு என்பது ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமாகும். அன்றைய நாளின் வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கான ஆற்றலை காலை உணவே அளிக்கின்றது.
அவ்வாறு நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவானது மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்க வேண்டும். அந்த வகையில் வரகு அரிசி கீரை அடை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வரகு அரிசி – 1 கப்
துவரம்பருப்பு – கால் கப்
கடலைப்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
உளுந்து -2 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
சன்னா ( கொண்டைக்கடலை) – கால் கப்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – அரை கப்
இலையாக ஆய்ந்த முருங்கைக் கீரை – அரை கப்
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – கால் கப்
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
சன்னாவை தனியாக 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பாசிப்பருப்பு, வரகு அரிசி, உளுந்து, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு ஊற வைத்த சன்னா உட்பட அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த விழுதுடன் வெங்காயம், கீரை, தேங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு, ஒன்றிரண்டாகப் பொடித்த சோம்பு இவற்றினை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்.
பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறு சிறு அடைகளாக ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதில் சோம்பு வாசனை பிடிக்காதவர்கள் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |