சிவகார்த்திகேயன் வைத்த நைட் பார்ட்டி... இமான் மனைவியை மட்டும் அனுப்பியது அம்பலம்
சிவகார்த்திகேயன் வைத்த நைட் பார்ட்டிக்கு டி.இமான் தனது முதல் மனைவி மோனிகாவை மட்டும் அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் பாண்டியன் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் இமான் பிராச்சினை
இசையமைப்பாளர் இமான் கொடுத்த பாடல்கள் சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவரை பாடகராகவும் வலம் வர வைத்துள்ளது.
இருவரும் அண்ணன் தம்பி போன்று இருந்துவந்த நிலையில், சமீபத்தில் இமான் பேட்டி ஒன்றில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் இந்த ஜென்மத்தில் அவரை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதன் பின்பு இமான் மற்றும் மோனிகா பிரிவதற்கு காரணமே சிவகார்த்திகேயன் என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் எங்களை சேர்த்து வைப்பதற்கு தான் முயற்சி செய்தார்... அதனால் தான் இமான் இவ்வாறு குற்றச்சாட்டு வைக்கின்றார் என்று பதில் அளித்தார்.
இரவு பார்ட்டி
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பாண்டியன் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது, இவர்களின் சர்ச்சை குறித்து சில விடயங்களை கூறியுள்ளார்.
அதாவது சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டி ஒன்று வைத்ததாகவும், இதற்கு இமானை அழைத்தார், ஆனால் இமான் அப்பொழுது பிஸியாக இருந்ததால் தனது மனைவியை மட்டும் அந்த பார்ட்டிக்கு அனுப்பி வைத்தார் என்று கூறியுள்ளார்.
மேலும் சினிமாவில் இருப்பவருக்கு இரவு விருந்தில் என்ன நடக்கும் என்பது தெரியாதா? அவ்வாறு தெரிந்தும் இமான் எதற்காக தன்னுடைய மனைவியை மட்டும் தனியாக அனுப்பி வைக்க வேண்டும்... குறித்த பார்ட்டிக்கு சென்ற மோனிகா காணாமல் போனதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |