ராஜு, அண்ணாச்சிக்கு பிக்பாஸ் கொடுக்க சொன்ன தண்டனை: செருப்பை கழட்டி அடிச்சிட்டு போ! பரபரப்பான ப்ரொமோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவருக்கும் பிக்பாஸ் தண்டனை கொடுக்க உத்தரவிட்ட ப்ரொமோ காட்சி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் பயங்கர விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், அவ்வப்போது பல அதிர வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றது.
இன்றைய கடைசி ப்ரொமோ காட்சியில் தன்னுடைய கருத்தை தைரியமாக வெளியே கூற முடியாத இரண்டு பேரை பிக்பாஸ் போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கு கூறியுள்ளார்.
இதில் அனைத்து போட்டியாளர்களும் ராஜு மற்றும் அண்ணாச்சியின் பெயரைக் கூறிய நிலையில், இறுதியில் பிக்பாஸ் தண்டனையை நிறைவேற்ற கூறியுள்ளார்.
கார்டன் ஏரியாவில் இருவரையும் உட்காரவைத்து அவர்களுடைய தலையில் தண்ணீரை சக போட்டியாளர்கள் ஊற்றும் தண்டனை வழங்கப்படுகிறது.
அப்போது ராஜு ஆத்திரமாக செருப்பை கழட்டி ஒரு அடி அடிச்சிட்டு போ என்று கூறியுள்ளார். ஆனால் யாரைக் கூறினார் என்று இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.
எப்பொழுதும் அனைவரையும் சிரிக்க வைத்து வரும் ராஜு இன்று கோபத்தில் இருப்பது காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.