மனோஜ் பாரதிக்கு இளையராஜா செய்த காரியம்: வாழ்த்து குவித்த ரசிகர்கள்
மனோஜ் பாரதிராஜாவிற்கு இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார்.
மனோஜ் பாரதிராஜா
இயக்குநா் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் காலமானாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட நிலையில் அது பலனளிக்காததால் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.
பாரதிராஜா இயக்கிய ‘தாஜ் மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவா் மனோஜ் பாரதிராஜா. இது இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதன் பின்னர் சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா, வருஷமெல்லாம் வசந்தம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.ஒரு நடிகராக மட்டுமின்றி மார்கழி திங்கள் படம் மூலமாக இயக்குநராகவும், பின்னணி பாடகராகவும் இவர் திறமை பெற்றவர்.
இவரது இழப்பிற்கு சினிமாத்துறை தவிர்ந்து ஏனைய அரசியல்துறையிலும் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பெசன்ட் நகர் மின் மயானத்தில் மனோஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இளையராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்துள்ளார்.
இந்த தீபம் மனோஜ் பாரதிராஜாவின் ஆன்மா சாந்தியடைய ரமணர் ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |