சிவப்பு காரில் வந்த விஜய்! இன்ஷூரன்ஸ் இல்லையா? காட்டுத் தீயாய் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது நடிகர் விஜய் வாக்களிக்க வந்த காரின் இன்ஷூரன்ஸ் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது, வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
விஜய்யை பார்க்க கூட்டம் அலைமோதிய நிலையில், சிவப்பு நிற மாருதி செலிரியோ காரில் திரும்பிச் சென்றார்.
அந்த காரின் எண்ணை பதிவிட்ட சிலர், காருக்கான இன்ஷூரன்ஸ் 2020-ஆம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது எனவும்,
2021-ஆம் ஆண்டுக்கான ஓர் அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாகவும் தகவல்களை பரப்பினர்.
இந்தத் தகவல் தீயாய் பரவிய நிலையில், தற்போது விஜய் தரப்பிலிருந்து, அந்தக் காருக்கு இன்ஷூரன்ஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த இன்ஷூரன்ஸ் நகலை விஜய் தரப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
