ஒவ்வொரு கிழமையின் சிறப்பு என்ன? வாங்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய பொருட்கள் பற்றி தெரியுமா?
பொதுவாகவே இந்து மத நம்பிக்கைகளின் பிரகாரம் பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்கள் தென்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், வாரத்தின் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தெய்வங்களுக்கும் கிரகங்களுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.

அந்த நாட்களில் சில பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம், செல்வம், அமைதி மற்றும் முன்னேற்றத்தைத் தரும் என நம்பப்படுகிறது.
உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் செல்வ செழிப்பின் அதிபதியாக திகழும் மகா லட்சுமிக்கு உகந்த நாள் என்பதால் கல் உப்பை வாங்குவதால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.
அதைப்போல ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பொருட்கள் வாங்குவதால் எண்ணற்ற பலன்களை அடையலாம். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

எந்த கிழமையில் எந்த பொருள் வாங்கணும்?
திங்கட்கிழமை
சந்திர பகவான் மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாள். அரிசி, பால் பொருட்கள், இனிப்புகள், தானியங்கள் மற்றும் மின் சாதனங்கள் வாங்குவது குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை
முருகன் மற்றும் ஆஞ்சனேயருக்கு உரிய நாள். நிலம், வீடு மற்றும் பிற சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. பால், மரம் மற்றும் தோல் சார்ந்த பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

புதன்கிழமை
புத பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். கல்வி உபகரணங்கள், பச்சைக் காய்கறிகள், விளையாட்டு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவது வளர்ச்சியையும் வளத்தையும் தரும் என நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை
குரு பகவானுக்கு உகந்த நாள். மின் சாதனங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் அசையும் சொத்துக்கள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகும்.கண்ணாடி மற்றும் மிகவும் கூர்மையான பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.
வெள்ளிக்கிழமை
மகாலட்சுமி மற்றும் அம்பாளுக்கு மிகவும் உகந்த நாள். கல் உப்பு, சமையல் எண்ணெய், விளக்கெண்ணெய், கருப்பு எள், துடைப்பம், மரப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் வாங்குவது செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மசாலாப் பொருட்கள் மற்றும் இரும்புப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

சனிக்கிழமை
சனி பகவானுக்கு உரிய நாள். தண்ணீர் குவளை, பூச்செடிகள், ஆடைகள் மற்றும் தோட்டப் பொருட்கள் வாங்குவது நல்ல பலன்களைத் தரும். அதிக எடையுள்ள பொருட்கள் மற்றும் நிலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை
சூரிய பகவானுக்கு உகந்த நாள். சிவப்பு நிறப் பொருட்கள், கோதுமை மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. கண்ணாடிப் பொருட்கள் வாங்குவதும் நல்ல பலன்களை அளிக்கும் என நம்பப்படுகிறது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |