வெறும் 5 நிமிடத்தில் பூ போன்ற இட்லி செய்யலாம்! ரவை இருக்கா வீட்டில்?
தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை உணவு இட்லி.
ரவா இட்லி செய்முறையை இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரவா - 1 கப்
- நெய் - 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி - சிறிதளவு
- தயிர் - 1/4 கப்
- பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
- தேவையான அளவு - உப்பு
- பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
தாளிக்க
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடுகு- 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- முந்திரிப் பருப்பு - 10
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 1 சிறிய துண்டு
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் தயிர், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து இட்லித் தட்டில் மாவை ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.
இப்போது சுவையான ரவா இட்லி தயார்.