காலையில் இட்லி,தோசைக்கு சுவையான கொடமிளகாய் துவையல் செய்து பாருங்க!
காலையில் மிகவும் அவசரமாக நாம் உணவு செய்யும் போது எதாவது சுலபமான உணவுகளை தான் செய்வோம். அப்படி செய்யும் போது இட்லி தோசை கட்டாயமாக காலை உணவாக இடம்பெறும்.
இந்த உணவுகளுக்கு சட்னி, சாப்பார், துவையல் என செய்வதுண்டு. இன்றைய பதிவில் சுவையான கொடமிளகாய் துவையல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்
- பெரிய குடைமிளகாய் – 4
- மிளகாய் வற்றல் – 1
- துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு, புளி, – தேவையான அளவு
- தேங்காய் எண்ெணய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு உளுத்தம் பருப்பு -சிறிது.
செய்முறை
குடைமிளகாயை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு நறுக்கி கொள்ளவும். தேங்காய் எண்ணெயில் பெருங்காயம், 1 மிளகாய், பருப்பு வகைகள், தேங்காய் துருவலை சேர்த்து வாசனை வரும்படி வறுத்து எடுத்துக் கொண்டு நறுக்கிய குடைமிளகாயை துண்டுகள் போட்டு வதக்கவும்.
இவைகளை வதக்கிய பின் உப்பு, புளி கலந்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான குடைமிளகாய் துவையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |