வெண்டைக்காயை சரியான பதத்தில் எப்படி சமைப்பது? வளவளப்பு தன்மை இருக்கவே இருக்காது
வெண்டைக்காய் என்றாலே அதன் வளவளப்பு தன்மை பலருக்கும் பிடிக்காததால் சாப்பிடுவதற்கு தயங்குவார்கள். இந்நிலையில் சரியான பதத்தில் எவ்வாறு சமைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காய்
அதிக சத்துக் கொண்ட வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட்ஸ் குறைவாகவே உள்ளது. வைட்டமின் சி மற்றும் கே1 அதிகமாக கொண்டுள்ளது.
வெண்டைக்காயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடுகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வெண்டைக்காயை சாப்பிடலாம்.
புரதச்சத்து குறைவாக உள்ள வெண்டைக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஜெல் போன்ற வளவளப்பான தன்மையைப் பார்த்தே பலரும் இந்த காயை ஒதுக்கி வைக்கின்றனர்.
இந்நிலையில் வெண்டைக்காயை சரியான பதத்தில் எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெண்டைக்காயை சமைக்கும் முறை
முதலில் வெண்டைக்காயை வெட்டும் முன்பு தண்ணீரில் கழுவிவிட்டு சிறிது நேரம் உணர வைக்க வேண்டும். கத்தியில் ஒட்டாமல் இருப்பதற்கு சிறிது எண்ணெய்யை கத்தியில் தேய்த்துக் கொள்ளவும்.
பழுப்பு நிற புள்ளிகள் மற்றும் கறைகள் இல்லாமல் வெண்டைக்காயை வாங்க வேண்டும். முத்தல் இல்லாமல் பிஞ்சு வெண்டைக்காயாக இருக்க வேண்டும்.
வெண்டைக்காயை வாங்கியதும் அப்படியே ஃபிரிட்ஜில் வைக்காமல் பேப்ர் அல்லது ஜிப் லாக் கவரில் போர்த்தி வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் 4 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
வெண்டைக்காயை சமைக்கும் முன்பு கழுவி வெட்டக்கூடாது. அவ்வாறு செய்தால் குழைவடைவதுடன், அதிகமான பிசுபிசுப்பு ஏற்பட்டுவிடும்.
நறுக்கியபின் கழுவி உப்பு போட்டு வதக்கினால் நன்றாக இருக்கும்.. மெல்லிய துண்டுகளாக வெட்டுவதை விட பெரிய துண்டுகளாக வெண்டைக்காய்களை வெட்டுவது எப்போதும் சிறந்தது.
சமைப்பதற்கு முன்பு வெண்டைக்காயை வெட்டி நன்றாக உலற வைத்துவிட வேண்டும். மேலும் இவை சீக்கிரம் குழைந்துவிடும் என்பதால், அரை மணிநேரம் வினிகரில் ஊற வைப்பதும் மிகவும் சிறந்தது.
பிசுபிசுப்பு மற்றும் வளவளப்பு இல்லாமல் இருப்பதற்கு அதிக வெப்பத்தில் சமைக்க வேண்டுமாம். காய்கறிகளை சமைத்து முடிக்கும் தருவாயில் உப்புபோடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |