காலை உணவாக சுண்டல் எடுத்துக்கோங்க... நாள் முழுவதும் மின்னல் வேகத்தில் செயல்படுவீங்க
காலை வேளைக்கு ஏற்ப உணவாக சுண்டலை நீங்கள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் சுண்டல் சாப்பிட்டால் என்ன பயன்?
வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் கொண்ட சுண்டலை காலை உணவாக எடுத்துக் கொள்ளும் போது பசி உணர்வு இல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
சுண்டலில் வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் ஃபோலேட் போன்ற குழுக்களில் சிறந்த மூலமாகும். இந்த வைட்டமின்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றம், நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் செல் உற்பத்திக்கு அவசியம்.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன், கொலாஜன் உற்பத்தியி மற்றும் இரும்பு உறிஞ்சுதலுக்கு அவசியமானதாகும்.
வைட்டமின் கே சத்தானது ரத்த உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
சுண்டலில் காணப்படும் முக்கிய தாதுக்கள்
இதிலுள்ள இரும்புச் சத்துக்கள் ஆக்ஸிஜனை செல்களுக்கு கொண்டு செல்லும் ஹீமோகுளோபினில் காணப்படும் முக்கிய தாதுவாகும்.
மேலும் தசை மற்றும் நரம்பு செயல்பாடு மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தேவையான மெக்னீசியம் சத்துக்களை கொடு்க்கும்.
இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான தாதுவாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |