இட்லியுடன் வடை சேர்த்து சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குத் தான்
பெரும்பாலான நபர்கள் இட்லி மற்றும் வடை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் நிலையில், இவை ஆரோக்கியமானதா என்பதை இநத பதிவில் தெரிந்து கொள்வோம்.
இட்லியுடன் வடை
இந்திய மாநிலமான தமிழகத்தில் காலை உணவாக இட்லியை தான் அதிகமானோர் சாப்பிடுகின்றனர். இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் வடையும் சேர்த்து சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்துமாம்.
ஏனெனில் வடை எண்ணெய்யில் பொரிக்கப்படுவதால், அதிக கலோரிகளை கொண்டுள்ளது. அரிசி மற்றும் உளுந்து இவற்றினை வைத்து செய்யப்படும் இட்லி குறைவான கொழுப்பு, அதிக நார்ச்சத்து உள்ள உணவாகும்.
இவை செரிமானத்திற்கு உதவுவதுடன், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகவும் இது விளங்குகின்றது.
ஆனால் வடை எண்ணெயில் பொரிக்கப்படுவதால், அதிக கலோரிகளை கொண்டது. இதில் கொழுப்பும் அதிகமாக இருப்பதால், இதனை சாப்பிடும் போது உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இட்லி மற்றும் வடை சேர்த்து அளவோடு சாப்பிட்டால், எந்தவொறு பிரச்சினையும் இல்லை. மேலும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டில் செய்து சாப்பிட்டால் எண்ணெய் குறைவாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |