சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உணவில் தேங்காய் சேர்க்கலாமா?
தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது.
தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.
மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செல் சேதத்தினை தடுக்கவும், இதில் உள்ள செறிவூட்டப்பட்ட கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றது.
அதிகப்படியாக கொழுப்பு உடம்பில் சேர்ந்தால் எடை அதிகரிப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினையும் ஏற்படும்.
பொதுவாக தேங்காய் எண்ணெய்யினை சமையலில் பயன்படுத்துவது என்றால் அது தனி நபர்களின் விருப்பம் என்றாலும் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிலும் இதய நோய், கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.
மேலும் சமையலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |