இட்லி மீந்து விட்டதா? பத்தே நிமிடத்தில் சூப்பரான உப்புமா செய்யலாம்!
காலை உணவாக இருந்தாலும் சரி,இரவு உணவாக இருந்தாலும் சரி பெரும்பாலான வீட்டுகளில் இட்லி, தோசை தான் பிரதானமாக செய்வார்கள்.
தோசையை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இட்லியை விரும்பி சாப்பிடுவதில்லை. சிலர் வீட்டில் இட்லி நிறைய மீந்து போய்விடுகின்றது. அதனை அப்படியே வீணாக்கிவிடுவார்கள். இனி மீந்து போன இட்லியை தூக்கி போடாதீர்கள்.
மீந்து போன இட்லியை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இட்லி உப்புமா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி - 10
பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் பொடி - அரை சிட்டிகை
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதவில் மீந்து போன இட்லிகளை ஒரு பாத்திரத்தில் நன்றாக உதிர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உதிர்த்து வைத்த இட்லியை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும். பின்னர் சுவைக்கு ஏற்ப உப்பை சேர்ந்து இரண்டு நிமிடங்கள் நன்றாக கலந்துவிட்டு இறக்கினால், சுவையான இட்லி உப்புமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |