வீட்டுல இட்லி மீதம் ஆகிவிட்டதா? இப்படி சுவையான மஞ்சூரியன் செய்து சாப்பிடுங்க
பரபரப்பான காலை நேரத்தில் சத்துமிக்க காலை உணவு என்றால் அது இட்லி தான். 6 மாத குழந்தை முதல் 60 வயதான பாட்டி வரை எளிதாக செரிமானம் ஆகக்கூடியதும் இட்லி தான்.
சூடான இட்லிக்கு, மணமணக்கும் சாம்பார், வித்தியாசமான சட்னிகளை வைத்து ருசித்தால் அதன் சுவையே தனி.
வெறும் இட்லிகளாக சாப்பிட்டு போரடித்தவர்களுக்காக தான் இந்த பதிவு, இதில் இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை
இட்லிகள் - 10
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் - ஒருடேபிள்ஸ்பூன்
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாதூள்- அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு -சுவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
இட்லிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, கார்ன் ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள்.
கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் போட்டுப் பொரித்தெடுங்கள்.
குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இட்லி, எண்ணெய் குடித்துவிடும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, அதோடு கரம் மசாலா, மிளகாய தூள் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பொரித்த இட்லி மஞ்சூரியன்களைப் போட்டு கிளற வேண்டும். இதுவும் இட்லி மஞ்சூரியனில் ஒரு வகை.
இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான வடகறி