இட்லி மாவை 7 நாட்கள் ப்ரிட்ஜில் வைப்பீங்களா? இந்த எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்
பொதுவாக நமது வீடுகளில் இட்லி, தோசைக்காக அரைக்கப்படும் மாவை குறைந்தது 7 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது.
ஆனால் அதில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மாவு புளிக்கும் போதே அதில் உள்ளே பாக்டீரியாக்கள் பல்கிப்பெருகும், இதுவும் உடலுக்கு ஆரோக்கியம் தான்.
அதே சமயம், அந்த மாவை மூன்று நாட்களுக்கு மேலாக வைத்து பயன்படுத்தும் போது பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகமாகும், இது உடலுக்கு பல தொந்தரவுகளை உண்டுபண்ணும்.
மாவு அரைத்து 2 முதல் 3 நாட்கள் வரை பயன்படுத்து மட்டுமே சிறந்தது, மூன்று நாட்களுக்கு மேலாக ஒரே பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தும் போது உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
அந்த வகையில், உடலுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இட்லி மாவை எப்படி பதப்படுத்தலாம்? அதனால் வரும் பின் விளைவுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
இட்லி மாவால் வரும் ஆபத்து
இட்லி மாவை பதப்படுத்தலுக்காக அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரையை பயன்படுத்தும் போது வாயுத்தொந்தரவு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை உண்டு பண்ணலாம்.
மூன்று நாட்களுக்கு மேல் மாவை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் போது வயிறு அசௌகரியத்தை ஏற்படும். மாவு அரைக்கப் பயன்படுத்தப்படும் உளுந்து அதிகம் இருந்தால் தோல் சம்மந்தப்பட்ட அலர்ஜி வரலாம்.
வெந்தயம் பயன்படுத்துவதால் உடலில் வீக்கம் ஏற்படலாம், மூன்று நாட்களுக்கு மேல் ஆவதால் செரிமானத்தில் கூட சிக்கலை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் போன்றவை ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |