ஒரு வாரமே ஆனாலும் மாவு புளித்துபோகாமல் இருக்கவேண்டுமா? இதை மட்டும் செய்யுங்க
கோடைக்காலம் வந்துவிட்டால் ஆட்டி வைத்த மாவு சீக்கிரமாக புளித்துபோய்விடும். இரண்டு நாட்கள் ப்ரிட்ஜில் வைத்தால் கூட மாவு புளித்து போய்விடுகிறது.
மாவை அரைக்கும் போது ஒரு சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே புளிக்க விடாமல் தடுக்கலாம். முதலில் இட்லி அரிசியை தண்ணீரில் போட்டு, 4 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அரைக்க வேண்டும்.
புளிக்கவிடாமல் இருக்க
8 மணி நேரம் 10 மணிநேரம் எல்லாம் ஊறவைத்த அதனாலேயே புளிக்க ஆரம்பித்துவிடும். இதேப்போல் உளுந்தை இட்லிக்கு ஊறவைக்கும் போது 1 மணிநேரம் ஊறவைத்தால் போதுமானது.
உளுந்து மற்றும் அரிசியை கிரைண்டரில் தனித்தனியாக தான் போட்டு அரைக்க போகின்றோம்.

அப்படி உளுந்தையும், வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுக்கும்போது நீண்ட நேரம் ஆட்டக்கூடாது. 20 லிருந்து 25 நிமிடத்திற்குள் உளுந்து புசுபுசுவென பொங்கி அறைந்து கிடைத்துவிடும்.
பின், அரிசியையும் நீண்ட நேரம் கிரைண்டரில் ஆட்டவிடாமல் இருக்க வேண்டும். அரிசி உளுந்து இரண்டு பொருட்களையும் அரைக்கும்போது ஐஸ் வாட்டரை ஊற்றி அரைக்க வேண்டும்.

ஏனென்றால், கிரைண்டரில் மோட்டர் சூடாகும் போது, மாவும் சூடாகி, சீக்கிரம் புளித்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
கடைசியாக ஓரளவுக்கு புளித்த மாவை தேவைக்கு மட்டும் வெளியில் வைத்து உப்பு போட்டு கரைத்து சமைக்க பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மீதி மாவை உப்பு போடாமல் மூடி அப்படியே பிரிட்ஜில் வையுங்கள். இந்த மாவு 7 நாட்கள் ஆனாலும் புளித்துப் போகாமல் அப்படியே நன்றாக இருக்கும்.