இட்லி அரிசியில் இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும்! புசு புசுவென இட்லி மல்லிகை பூ போல் வருமாம்!
பொதுவாக இட்லி மாவு என்னதான் சரியாக அரைத்தாலுமே பலருக்கும் இட்லியை சுடும்போது கல்லு போல மாறிவிடும். மாவில் உளுந்து சற்று அதிகமாகிவிட்டாலும் பிரச்சினை தான். அப்படி இட்லியை புசுபுசுவென வர எப்படி அரைக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
நீங்கள் இட்லிமாவை அரைக்கும்போது முதலில் அரிசியோடு 2 ஸ்பூன் இந்த பொருளை சேர்த்து அரைக்கவேண்டும்.
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இட்லி அரிசி 4 டம்ளர், 2 ஸ்பூன் பொட்டுக்கடலை போட்டு 4 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை கொண்டு உளுந்தம் பருப்பு 1 டம்ளர், வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஊறிய பொருட்களை கொண்டு கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
உளுந்து, வெந்தயத்தை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி ஆட்டி தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பின்பு அரிசி பொட்டுக்கடலை சேர்ந்த கலவையை போட்டு, ஆட்டி அரிசியையும் உளுந்தயையும் ஒன்றாக போட்டு மாவுக்கு தேவையான உப்பையும் கலந்து நன்றாக கரைத்துக்கொள்ள வேண்டும்.
கிரைண்டரை கழுவிய பின் அந்த தண்ணீரை இந்த மாவில் ஊற்றி கரைக்க வேண்டும். அவை மாவு புளிப்பதற்கு உதவியாக இருக்கும். மாவை அப்படியே 8 மணி நேரம் மூடிவிட்டு புளிக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
மறுநாள் காலை எழந்ததும் இட்லிமாவை நன்றாக கலந்து இட்லியை வார்த்து ஊத்த வேண்டும். அடுப்பில் இட்லி பானையை வைத்து விட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துவிட்டு அதன் பின்பு, தட்டில் இட்லி வார்த்து வைக்க வேண்டும்.
அப்போது தான் இட்லில் நன்றாக புசுபுசுவென வரும்.
முக்கியமாக இந்த மாவில் பொட்டுக்கடலை சேர்த்துள்ளதால், பிரிட்ஜில் வைத்தால் கூட் 4 அல்லது 5 நாட்கள் வரை கூட நன்றாக இருக்கும்.