மீந்து போன இட்லியில் பத்தே நிமிடத்தில் போண்டா செய்யலாம்!
காலையில் மீந்து போன இட்லியில் போண்டா செய்யலாம்.
தேவையான பொருள்கள்
- இட்லி - 3
- கடலைமாவு - 2 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - சிறிது
- தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
- பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
இட்லிகளை உதிர்த்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உதிர்த்து வைத்துள்ள இட்லி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.
இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான இட்லி போண்டா ரெடி.