Idli Benefits: தினமும் இட்லி சாப்பிடலாமா? மிகச்சிறந்த உணவாக இருப்பது ஏன்?
தென்னிந்தியாவில் மிக பிரபலமான உணவு என்றால் இட்லி தான், ஹொட்டல்களில் உணவுப்பொருட்களின் பட்டியலில் முதலிடமும் இட்லிக்கு தான்.
சுவை மிகுந்த காலை உணவாக இதை ரசித்து சாப்பிடுபவர்கள் பலர், தற்போது உலகளவிலும் பிரபலமடைந்து வருகிறது.
நீண்டகால உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கக்கூடியதும் இட்லியே. உடல் உபாதை என்று மருத்துவரை நாடினால் அவர் பரிந்துரைப்பதும் இட்லியைத் தான்.
இந்தளவுக்கு இட்லிக்கு முக்கியத்துவம் ஏன்? தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
நீராவியில் வேகவைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது, அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தையும் பெறலாம்.
சராசரியாக ஒரு இட்லியில், 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது, கொழுப்புச்சத்து அறவே இல்லை.
இதிலுள்ள நார்ச்சத்து அஜீரணத்தை போக்க உதவுகிற, தினசரி 4 இட்லிகள் சாப்பிடுவதால் அன்றைய நாளில் உடலுக்கு தேவையான 36 சதவிகித நார்ச்சத்தை பெற்றுவிடலாம்.
ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால் அவர்கள் தாராளமாக சாப்பிடலாம். ஆனாலும் கவனம் தேவை, அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய். நெய் தடவியோ, வறுத்தோ எடுப்பது கலோரிகளை அதிகப்படுத்தி விடும், இட்லியில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் போலேட் நிறைந்திருக்கிறது.
இதனால் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு, கொலஸ்ட்ராலை குறைக்கும், உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
பூப்போன்ற இட்லிக்கு
இட்லி அரிசி- 4 டம்ளர்
உளுந்தம் பருப்பு- 1 டம்ளர்
வெந்தயம்- அரை டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக மூன்று மணிநேரம் ஊறவைக்கவும், பின்னர் உளுந்தை கழுவி வெந்தயத்துடன் சேர்த்து அரைக்கவும், தண்ணீர் விடக்கூடாது, தெளித்து தெளித்து அரைக்க வேண்டும்.
நன்றாக பொங்கிவரும் வரை அரைக்கவும், குறைந்தது 20- 25 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும், கைகளில் உளுந்து மாவு ஒட்டக்கூடாது.
பின்னர் அரிசியை கழுவிவிட்டு கல் உப்பு சேர்த்து அரைக்கவும், ரவை பதத்தை விட மைய அரைபட வேண்டும், வடித்த சாதம் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம், மிருதுவான இட்லி கிடைக்கும்.
இப்படி அரைத்து எடுத்த உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக கலந்துவிட வேண்டும், நன்றாக கலக்கிய பின்னர் இரவு முழுவதும் புளிக்க விடவும்.
மறுநாள் காலையில் மேலாக பொங்கிஇருக்கும் மாவை எடுத்து இட்லி பாத்திரத்தில் இட்டு எடுத்தால் சுவையான பூப்போன்ற இட்லி தயார்!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |